அல்லு அர்ஜூனை இயக்கும் அட்லீ..!

 அல்லு அர்ஜூனை இயக்கும் அட்லீ..!

ஜவான் திரைப்படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் இயக்குனர் அட்லீ.

ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டிக் கொடுத்ததால், அட்லீயின் அடுத்த படத்தின் அப்டேட் என்ன என அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அல்லு அர்ஜூனை வைத்து இயக்குனர் அட்லீ அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா 2 படத்தின் பணிகள் முடிவடைந்ததும், அல்லு அர்ஜூன் அட்லீயின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரிமாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Related post