பிரபல நடிகர் சிவநாராயணமூர்த்தி காலமானார்!

 பிரபல நடிகர் சிவநாராயணமூர்த்தி காலமானார்!

திரைப்பட நடிகர் பட்டுக்கோட்டை T. சிவநாராயணமுர்த்தி (Age: 66) நேற்று 07.12.2022 இரவு 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

இவர் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி.

வடிவேலு நடித்த பல படத்தில் அவருடன் சேர்ந்து காமெடி காட்சிகள் பலவற்றில் நடித்து பாராட்டைப் பெற்றவர்.

ஒருசில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

திடீர் என்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிவநாராயணமூர்த்தி காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்

 

Spread the love

Related post

You cannot copy content of this page