நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் காலமானார்

 நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் காலமானார்

காக்க காக்க,வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை,பிகில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமாகியுள்ளார்.

திருவான்மையூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் காலையில் அவர் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சித்தி எனும் தொடர் மூலமாக நடிகராக அறிமுகமான இவர்,2003 ஆம் ஆண்டு வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட அந்த கால வெற்றி திரைப்படங்களில் பலவற்றிலும் நடித்திருக்கின்றார்

இருந்தபோதிலும் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகிய வடசென்னை திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த இவரது தம்பி என்னும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் தமிழ் அல்லாத சில மலையாளம், தெலுகு உள்ளிட்ட திரைப்படங்களிலும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post