நயன்தாரா இடத்தில் ஆண்ட்ரியா…மனுஷி’யை உருவாக்கிய கோபி!

 நயன்தாரா இடத்தில் ஆண்ட்ரியா…மனுஷி’யை உருவாக்கிய கோபி!

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்து மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் அடித்த படம் தான் “அறம்”.

இப்படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே நயன்தாராவிற்காக கோபி நயினார் எழுதிய கதை தான் “மனுஷி”.

அதன் பிறகு அறம் பட வெளியீட்டு நேரத்தில் நடைபெற்ற சலசலப்பில் கோபிக்கும் நயன்தாராவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

இதனால், நயன்தாராவுக்கு பதில் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்து படத்தை தொடங்கி விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி சத்தமின்றி நடந்து வருகிறது. படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கிறது.

ஆண்ட்ரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படம் பற்றிய முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

 

Related post