ஆக்‌ஷன் இல்லாத படத்தில் நடிக்கும் அஜித்!

 ஆக்‌ஷன் இல்லாத படத்தில் நடிக்கும் அஜித்!

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் படம் துணிவு. வரும் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது இப்படம்.

இப்படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்குமார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இதில், விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் அஜித்திற்கு ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா முதலில் புக் செய்யப்பட்ட நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் அல்லது நடிகை திரிஷா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post