இசையமைப்பாளருடன் கீர்த்தி சுரேஷ் திருமணம்!?

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
இவருக்கும் பிரபல இசையமைப்பாளர் அனிருத்திற்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக செய்தி பரவியது.
இது குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.சுரேஷ் குமார் கூறும்போது, ‘இது ஆதாரமற்றச் செய்தி. அதில் உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் நாளுக்கு நாள் புது புது வதந்தியாக வலம் வந்து கொண்டே இருக்கிறது.