கோவாவில் காதலனை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்

 கோவாவில் காதலனை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு சினிமாவிலும் நன்கு அறியப்பட்டவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில், தேவ், தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தற்போது இவர் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் திருமணம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கோவாவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Related post