36 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் கமல்ஹாசனின் “பேசும்படம்”!

 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் கமல்ஹாசனின் “பேசும்படம்”!

1987 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் பேசும் படம்.

இப்படம், சுமார் 35 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டு சுமார் 1 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்திருந்தது.

இயக்குனர்சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. படத்தில் வசனமே இல்லாமல் வெளியாகி அப்போதே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது, சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது ராஜ்கமல் நிறுவனம்.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு நாள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related post