பிரபுவின் மகள் திருமணம்; நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!
நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் இன்று நடைபெற்றது.
நடிகர் பிரபுவின் மகளுக்கும் பிரபுவின் சகோதரி மகனான குணாலுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்திருந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாற, இருவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். லெஜண்ட் சரவணன், விஷால், குஷ்பூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.