அருண்ராஜா காமராஜாவின் “லேபிள்” பட அறிவிப்பு வீடியோ

 அருண்ராஜா காமராஜாவின் “லேபிள்” பட அறிவிப்பு வீடியோ

கனா, நெஞ்சுக்கு நீதி திரைப்படங்களுக்குப் பிறகு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ”லேபிள்”.

இது இணையத் தொடராக உருவாகி வருகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இந்த தொடர் வெளியாக உள்ளது.

ஜெய் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாம் சி எஸ் இசையமைத்து வருகிறார். இந்த தொடரின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. ராஜா படத்தொகுப்பு செய்து வருகிறார்.

விரைவில் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்த தொடரில் குற்றப்பிண்ணனியை மையமாக வைத்து கதை பின்னாப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related post