அடுத்த மாதம் துவங்கும் மிஷ்கின் – விஜய் சேதுபதி படம்!

 அடுத்த மாதம் துவங்கும் மிஷ்கின் – விஜய் சேதுபதி படம்!

மிஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தினை இயக்கி முடித்து வைத்திருக்கிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தினை இயக்க திட்டம் போட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மிஷ்கின்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related post