தன்னை கலாய்க்கும் ரசிகர்களுக்கு அஷ்வின் கொடுத்த பதிலடி!

 தன்னை கலாய்க்கும் ரசிகர்களுக்கு அஷ்வின் கொடுத்த பதிலடி!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்துவரும் நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி”. இதில் பங்குபெற்ற அஷ்வின் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அஷ்வினுக்கான ரசிகர்கள் பட்டாளமும் பெரிதானது. இந்நிலையில், இவர் நடித்த முதல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நான் 40 கதை கேட்டேன். அந்த கதைகேட்கும் போது நான் தூங்கிவிட்டேன் என்று காமெடியாக அவர் கூற, நெட்டிசன்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் இவரை கழுவி ஊற்றினர்.

இவர் கதை ஓகே சொல்லி நடித்த படமும் பெரிதாக ஓடவில்லை என்பதால்,கடந்த சில மாதங்களாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்தார் அஷ்வின்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர்கள் சிலரின் கேள்விக்கு பதில் அளித்த அஸ்வின் கூறும் போது, “என்னை பிடித்தவர்களுக்கு நன்றி, என்னை பிடிக்காதவர்கள் இருந்தால் அவர்களிடம் ஒன்றை சொல்கிறேன். உங்களுக்கு என்னை பிடிக்க வைக்கும் அளவுக்கு உழைத்து படங்கள் செய்வேன்.” என்று கூறியுள்ளார்.

Related post