அப்பா ஆகிறார் அட்லீ

 அப்பா ஆகிறார் அட்லீ

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் அட்லீ. தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய்யை வைத்து அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கியவர் அட்லீ.

இவர், சில வருடங்களுக்கு முன் தனது காதலியான ப்ரியாவை கரம் பிடித்தார்.

தற்போது, தான் அப்பாவாக ஆகப்போவதாக இயக்குனர் அட்லீ கூறியிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும்.

சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

 

Related post