150 கோடி வசூலை வாரிக் குவித்த “ஆவேஷம்”

 150 கோடி வசூலை வாரிக் குவித்த “ஆவேஷம்”

கடந்த மாதம் பஹத் பாசில் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் “ஆவேஷம்”.

இப்படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, கன்னடா என தென்னிந்திய திரையரங்குகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறது.

பாசிடிவான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதால், தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது இப்படம்.

இதுவரை ஆவேஷம் திரைப்படம் சுமார் 150 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னமும் திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் மேலான ரசிகர்கள் இப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.

ஆனால், வரும் 9 ஆம் தேதி இப்படத்தை அமேசான் ஓடிடி நிறுவனம் ஸ்டிரீமிங் செய்யவிருப்பப்பது குறிப்பிடத்தக்கது.

Related post