மீண்டும் தள்ளிச் சென்ற அருண் விஜய்யின் “பார்டர்”

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தான் “பார்டர்”.
இப்படம் உருவாகி நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிச் சென்றது.
இந்நிலையில், பார்டர் திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரிலீஸ் தள்ளிச் செல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அருண் விஜய்யுடன் ரெஜினா காசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி,எஸ் இசையமைத்துள்ளார்.