1930 களில் கேப்டன் மில்லர்; சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

சத்ய ஜோதி தயாரிப்பில் தியாகராஜன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.
இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியுள்ளார்.
“தென்காசி அருகே மிகப்பெரும் செட் அமைத்து சுமார் 70 சதவீத படப்பிடிப்பு அங்கு நடைபெறும், மீதமுள்ள படப்பிடிப்பு சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
தென்காசி பகுதியின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.