கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா எங்கே ? எப்போது ??
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க மிகவும் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.
இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வரும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு படத்தினை திரைக்கு கொண்டு வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.