விஜய் மக்கள் இயக்கம் மூலமாக சென்னையில் இலவச மருத்துவ முகாம்!

 விஜய் மக்கள் இயக்கம் மூலமாக சென்னையில் இலவச மருத்துவ முகாம்!

மிக்ஜாம் புயல் காரணமாக ஒருவார காலமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பெரிதளவில் பாதிப்பிற்குள்ளானது.

வெள்ளம் தற்போதுமுழுமையாக வடிந்துவிட்ட நிலையில், நோய் தொற்றால் மக்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை முதலே பலரும் வந்து மருத்துவ முகாமை பயன்படுத்தி வருகின்றனர். வெள்ளத்தின் போது மக்களுக்கு பல உதவிகள் மக்கள் இயக்கம் மூலமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related post