கோப்ரா ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. பிரம்மாண்ட ரிலீஸுக்கு ஆயத்தம்!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்திருக்கும் படம் தான் “கோப்ரா”. தனது உடலை வருத்திக் கொண்டு நடிப்பதில் கிங் – மேக்கராக இருக்கும் நடிகர் தான் “விக்ரம்”.
இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே வெளியாகியுள்ள இரண்டு பாடல்களும் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
விக்ரம் நடிப்பில் அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகியிருப்பதால், இப்படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்து அதற்கான வியாபார யுக்திகளை கையில் எடுத்துள்ளது.