D50 படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட பணியில் தனுஷ்!
கேப்டன் மில்லர் படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ், அடுத்ததாக தனுஷ் நடித்து இயக்கி வரும் படம் தான் D50. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாததால் தனுஷின் 50வது படமான இதை D50 என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.
விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனராக தனுஷிற்கு இது இரண்டாவது படம் என்பதால், மூன்றாவது படத்தையும் உடனே ஆரம்பிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஆரம்பகட்ட பணிகளையும் துவக்கியிருக்கிறாராம் தனுஷ்.