தனுஷை இயக்கும் அஜித் பட இயக்குனர்

 தனுஷை இயக்கும் அஜித் பட இயக்குனர்

தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கி வரும் ஹச் வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி வரும் ஹச் வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related post