போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் நிரபராதியாம்… சொல்லிட்டாங்கப்பு!

 போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் நிரபராதியாம்… சொல்லிட்டாங்கப்பு!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் போதைப் பொருள் வழக்கில் கடந்து ஆண்டு கையும் களவுமாக பிடிபட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுமார் 20 நாட்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் வாட்ஸ் அப் பதிவுகள் மற்றும் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட தடயங்களை வைத்து அவரை கைது செய்தனர்.

பின் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த அவர், வாரம் வாரம் வெள்ளிக்கிழமை தோறும் போதை பொருள் தடுப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஆர்யன் கானிடம் இருந்து போதை பொருள் கைப்பற்றப்படவில்லை என்றாலும் பின்னர், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ஆர்யன்கான் நிரபராதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love

Related post

You cannot copy content of this page