கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் சிம்பு!?

 கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் சிம்பு!?

மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் தக் லைஃப்.

படத்தின் படப்பிடிப்பானது வெளிநாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தேர்தலுக்காக கமல்ஹாசன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படப்பிடிப்பிற்கு தொடர்ந்து காலம் தாழ்த்தியதா துல்கர் சல்மான் இப்படத்திலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல், துல்கர் சல்மான் இடத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறதாம்.

 

Related post