கமல்ஹாசனால் வீடு திரும்பிய மணிரத்னம்!

 கமல்ஹாசனால் வீடு திரும்பிய மணிரத்னம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வருகிறது தக் லைஃப்.

வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கமல்ஹாசன் தனது கட்சி பணிகளுக்காக அவசரமாக சென்னை வந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் வேலைகள் அதிகமாக இருப்பதாகக் கூறி, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தக் கோரியிருக்கிறார் கமல்ஹாசன்.

இதனால், இயக்குனர் மணிரத்னம் உட்பட படக்குழுவினர் அனைவரும் செர்பியா நாட்டிலிருந்து சென்னை திரும்பியுள்ளனர்.

தேர்தல் முடிந்த பிறகே இனி படப்பிடிப்பு துவங்கப்படும் என்று படக்குழுவினர் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டார்களாம் தயாரிப்பு தரப்பு.

 

Related post