போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஜெயிலர் பட வில்லன்!

 போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஜெயிலர் பட வில்லன்!

மலையாளத் திரையுலகில் நடிகராக வலம் வரும் விநாயகன் தமிழில் ‘காளை’, ‘திமிரு’, ‘சிறுத்தை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அவர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நேற்று அவர் வில்லனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் டீசர் வெளியாகி மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்குது.

இந்த நடிகர் விநாயகன் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். நேற்று அவர் குடியிருந்து வரும் எர்ணாகுளம் ஃபளாட் குடியிருப்பில் ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்.

இது தொடர்பாக குடியிருப்பில் இருந்தவர்கள் எர்ணாகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நடிகர் விநாயகனை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றார்கள்.

அப்போது விநாயகன் புல் போதையில் இருந்துருக்கார். அச்சுழலில் கூட்டிச் செல்லப்பட்ட விநாயகன் எர்ணாகுளம் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்தபோது, மறுபடியும் அதிகமாக பேசி அங்கிருந்த போலீஸ் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக அவர் மீது எர்ணாகுளம் போலீஸார், காவல் நிலைய பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தார் என்று மேலும் அவர் மீது வழக்குகள் பாய்ந்ததது.

மேலும், அவர் ரத்தத்தில் மதுவின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீஸார்.

 

Related post