தளபதி 68 பட பூஜை; வீடியோவை வெளியிட்ட ஏஜிஎஸ்
வெங்கட் பிரபு டைரக்ஷனில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
பிகில் படத்திற்கு பின் விஜய்யுடன் ஏ ஜி எஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இப்படத்தில் கைகோர்த்துருக்குது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், லைலா, மீனாக்ஷி சவுத்ரி, அஜ்மல் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறாய்ங்க.
இப்படத்தின் பூஜை வீடியோ லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது.
அதன்படி, நேற்று தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.