பிக் பாஸ் தாமரை செல்விக்கு வீடு கட்டிக் கொடுக்கும் இசையமைப்பாளர்!

 பிக் பாஸ் தாமரை செல்விக்கு வீடு கட்டிக் கொடுக்கும் இசையமைப்பாளர்!

பிக் பாஸ் மூலம் தமிழக மக்களுக்கு மிகவும் பரிட்சயமானவர் நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வி.

தாமரையின் குடும்பம் வசிக்க நல்ல ஒரு வீடு இல்லை என தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

தாமரைக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவெடுத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், ஒரு நிகழ்ச்சிக்கு இதை பற்றிக் கூறியிருந்தார். இதனையடுத்து, தாமரை செல்வியின் ரசிகர்கள் தங்களால் இயன்ற தொகையை ஜேம்ஸ் வசந்த அவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, வீட்டிற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் தாமரையின் குடும்பத்தாரிடம் இது வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஜேம்ஸ்.

Related post