வெளியானது பிக்பாஸ் அறிவிப்பு.. இம்முறையும் கமல்ஹாசன்!

 வெளியானது பிக்பாஸ் அறிவிப்பு.. இம்முறையும் கமல்ஹாசன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி’யில் மிகவும் பிரபலமான ஷோ’வாக பார்க்கப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சி, சுமார் 6 சீசன்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது தமிழில். மற்ற மொழிகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தமிழில் சுமார் 6 சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இம்முறை, ஏழாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான முன் அறிவிப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு, ஏழாவது சீசன் விரைவில் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் நட்சத்திரங்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post