பிக் பாஸ் சீசன் 7க்கு கமல்ஹாசன் வாங்கும் சம்பளம் இது தான்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் கமல்ஹாசன் சுமார் 130 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களின் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.