முதல் சிங்கிளை வெளியிட்ட கர்த்தியின் “ஜப்பான்” படக்குழு!!

 முதல் சிங்கிளை வெளியிட்ட கர்த்தியின் “ஜப்பான்” படக்குழு!!

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார்.

மேலும் விஜய் மில்டன், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது இப்படம்.

இந்நிலையில், டச்சிங் டச்சிங் என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளது. இப்பாடலை, கார்த்தி பாடியுள்ளார். இணையத்தில் வேகமாக பரவி வருகிறது இப்பாடல்.

Related post