கேரளாவில் தள்ளுமுள்ளு; லோகேஷ் காயம்!

 கேரளாவில் தள்ளுமுள்ளு; லோகேஷ் காயம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “லியோ”.

உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், கேரளாவில் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் உள்ள அரோமா திரையரங்கில் லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார்.

அப்போது, அங்கு ரசிகர்கள் பலர் கூடியதால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கிக் கொண்ட லொகேஷின் காலில் காயம் ஏற்பட்டது.

அதன்பிறகு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கோயம்புத்தூர் திரும்பினார் லோகேஷ்.

Related post