சிறிய படங்களை ஓடிடி’க்கு வித்துட்டு போயிடுங்க… கே எஸ் ரவிக்குமார் பேச்சு!

 சிறிய படங்களை ஓடிடி’க்கு வித்துட்டு போயிடுங்க… கே எஸ் ரவிக்குமார் பேச்சு!

அறிமுக இயக்குனர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “மாலை நேர மல்லிப்பூ” . இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வசந்த் மற்றும் கே எஸ் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய கே எஸ் ரவிக்குமார், “ ட்ரெய்லரை பார்க்கும் போது மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. 21வயது உடைய இளைஞர் எப்படி இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்று.? படத்தின் காட்சிகளை பார்க்கும்போது சிறப்பான கதை அம்சம் கொண்ட திரைப்படமாக இது இருக்கும்.

எனவே, இதன் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு சென்று கொண்டாட்ட மனநிலையோடு பார்க்கின்றனர்.

எனவே, இந்த திரைப்படத்தை பெரிய நிறுவனங்கள் மூலம் வெளியிட வேண்டும் அல்லது ஓடிடியில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். எனது விருப்பம் இந்த படம் ஓடிடி’யில் வெளிவர வேண்டும். ” என்று கூறினார்.

Related post