மார்ச் 27ல் ஸ்டிரீமாகும் லவ்வர்!
அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், கெளரி ப்ரியா, கண்ணா ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் தான் லவ்வர்.
படம் வெளியாகி இளம் தலைமுறையினரிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், இப்படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்த டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளமானது, இம்மாதம் 27 ஆம் தேதி லவ்வர் திரைப்படம் தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.