தனது தந்தையின் உடல் நிலை பற்றி அறிக்கை வெளியிட்ட சிம்பு!

 தனது தந்தையின் உடல் நிலை பற்றி அறிக்கை வெளியிட்ட சிம்பு!

தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முக கலைகளை கொண்டு தமிழ் சினிமாவில் முக்கிய நபராக இருந்து வருபவர் டி ராஜேந்தர். சில தினங்களுக்கு முன் கடுமையான உடல் நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இவர் அட்மிட் ஆகியிருந்தார்.

சுமார் 4 நாட்கள் தீவிரமான சிகிச்சை அளித்தம் மருத்துவர்கள் தற்போது அவர் சீராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அபாயக்கட்டத்தை தாண்டி விட்டார் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், நடிகரும் டி ராஜேந்தரின் மகனுமான சிலம்பரசன் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

“எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிது இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சை தர வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

அவர் உடல்நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related post