தனுஷ் படத்தில் “விக்ரம்” பட நடிகர்!

 தனுஷ் படத்தில் “விக்ரம்” பட நடிகர்!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.. தனுஷிற்கு இன்னமும் 30 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே இருக்கும் சூழலில், அடுத்த படத்திற்கான பணிகளை துவக்கி விட்டார் தனுஷ்.

அடுத்ததாக தானே நடித்து இயக்கும் திரைப்படமானது விரைவில் துவங்கப்படவிருக்கிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கிறது.

அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இருக்கிறார் தனுஷ். இப்படத்தில் விக்ரம் படத்தில் நடித்தவரும் பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகனுமான காளிதாஸ் ஜெயராம் நடிக்கவிருக்கிறார்.

இந்த அறிவிப்பை காளிதேஸே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதனை தெரிவித்தார்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றினார் காளிதாஸ். அவரது நடிப்பும் பேசப்பட்டது.

தனுஷோடு இணைவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழத் துவங்கியுள்ளது.

 

Related post