5வது வாரத்திலும் ஆர்ப்பரிக்கும் காந்தாரா

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் அவரே நடித்து வெளிவந்த திரைப்படம் தான் காந்தாரா. கன்னட மொழியில் வெளியான இப்படம், அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டதால், மற்ற மொழிகளிலும் வெளியானது.
தமிழில் வெளியாகி இப்படம் சக்கை போடு போட்டதால், மிகப்பெரும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இப்படம் வெளியாகி 4 வாரங்கள் முடிந்துள்ள நிலையில் இன்றும் சுமார் 100 திரையரங்குகளில் தமிழகத்தில் ஓடிக் கொண்ட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 350 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை குவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.