அரசியல் தாக்கத்தை மாவீரன் கொடுத்தது – படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!

 அரசியல் தாக்கத்தை மாவீரன் கொடுத்தது – படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!

மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து மாபெரும் ஹிட் அடித்த படம் தான் மாவீரன்.

படம் அனைத்து தரப்பு மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம், ஓடிடி தளத்தில் வெளியானது.

திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத பலர், ஓடிடி தளத்தில் பார்த்து படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாவீரன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “இப்பொழுதுதான் ‘மாவீரன்’ திரைப்படத்தை பார்த்தேன், மக்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்துவதில் உள்ள அரசியலை, நல்ல முறையில் படமாக எடுத்துள்ளீர்கள், படத்தின் கற்பனை பகுதி அருமையாக இருந்தது, அரசியல் தாக்கமாக இருந்தது. ‘நீ தங்குவியா இந்த வூட்டுல?” என்ற படத்தின் வசனத்தை மேற்கோள் காட்டி பாராட்டியுள்ளார்.

 

Related post