விஜய் 69 படத்தை இயக்கப் போவது யார்.? பரபரக்கும் கோலிவுட்!

 விஜய் 69 படத்தை இயக்கப் போவது யார்.? பரபரக்கும் கோலிவுட்!

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனது அடுத்த படத்தோடு (விஜய் 69) சினிமாவிற்கு முழுக்குப் போடவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார் விஜய்.

தனது அடுத்த படத்திற்கான இயக்குனர் தேடுதல் வேட்டையில் இருக்கிறார் விஜய். அதில், ஆர்ஜே பாலாஜி சொன்ன ஒன்லைன் ஓகே செய்து வைத்திருந்தார் விஜய்..

அதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒன்லைனும் விஜய்க்கு பிடித்து போய்விட்டது. இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று குழப்பத்தில் இருந்து வருகிறார் விஜய்.

தற்போது இரண்டு பேரையும் ஃபுல் ஸ்கிரீப்டையும் தயார் செய்ய சொல்லியிருக்கிறார் விஜய்.,

ஃபுல் ஸ்டோரியை பார்த்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளாராம் விஜய்.

 

Related post