திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளிவருகிறது “லால் சலாம்”

 திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளிவருகிறது “லால் சலாம்”

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகி வரும் படம் தான் லால் சலாம்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், படத்தின் ஒரு சில காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது என்ற தகவல் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

இதனால், படக்குழு மீண்டும் பட வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது. அதில், திட்டமிட்டபடி படம் திரைக்கு வரும் எனவும் கூறியிருக்கிறது படக்குழு.

 

Related post