சிவகார்த்திகேயனின் “மாவீரன்”; பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!?

 சிவகார்த்திகேயனின் “மாவீரன்”; பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தினை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.

வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் பரத் ஷங்கர். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் இந்த விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. ஜூலை 2 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இதற்காக சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தினருக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இசை வெளியீடு நடைபெறும் கல்லூரி எது என்ற அறிவிப்பு வெளியாகும்.

 

Related post