அயலான் இசை வெளியீட்டு விழா.. இன்று சென்னையில்..!!

 அயலான் இசை வெளியீட்டு விழா.. இன்று சென்னையில்..!!

இன்று நேற்று நாளை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ரவிக்குமார் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அயலான்’.

இந்த வருடம் தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தள்ளிச் சென்ற நிலையில், பொங்கல் விடுமுறையை ஒட்டி ‘அயலான்’ படம் வெளியாக இருக்கிறது.

அப்படி படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

அந்த வகையில், இன்று 26ம் தேதி சென்னையில் மிகப்பெரிய அளவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோல இப்படத்தில் இருந்து ஏற்கெனவே முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இன்று நடைபெறவுள்ளது.

 

Related post