பிரமாண்டமாக வெளியாகிறது “ஜப்பான்” இசை வெளியீட்டு விழா ; சிறப்பு விருந்தினர்கள் ?
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி தனது 25 வது படத்தில் நடித்திருக்கிறார்.
படத்திற்கு ஜப்பான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.
இவ்விழாவானது, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. ஜி வி பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.