கம் பேக் கொடுக்கும் ராகவன்; மே 23ல் ரீ ரிலீஸ்!

 கம் பேக் கொடுக்கும் ராகவன்; மே 23ல் ரீ ரிலீஸ்!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க வெளியான திரைப்படம் தான் “வேட்டையாடு விளையாடு”.

க்ரைம் இன்வஸ்டிகேஷ் த்ரில்லர் படமாக வெளிவந்த இப்படம், மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல், ஹரீஷ் ஜெயராஜின் இசை தூள் கிளப்பியது.

போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற தோரணையில் படம் முழுவதும் தன்னை மெருகேற்றி நடித்திருந்தார் கமல்ஹாசன்.

2006 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் திரைக்கு வர இருக்கிறது.

ஆம், வரும் 23 ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

 

Related post