அனல் பறக்கும் சமூக வலைதளம்; காத்திருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

 அனல் பறக்கும் சமூக வலைதளம்; காத்திருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கிறது.

இந்நிகழ்வு சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் – அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 2) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

 

Related post