5 மணி நேரம் மேக்-அப்… தங்கலான் பற்றி பேசிய மாளவிகா!

 5 மணி நேரம் மேக்-அப்… தங்கலான் பற்றி பேசிய மாளவிகா!

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவெடுத்து நிற்கிறது “தங்கலான்”. விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார்.

படத்தின் மேக்கிங் வீடியோவிற்கு கிடைத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு.

இந்நிலையில், இப்படத்தில் நடித்து வரும் நாயகி மாளவிகா மோகனன், “மேக்கப் மற்றும் காஷ்ட்யூமிற்கு 4 முதல்5 மணி நேரம் தேவைப்படும் கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவு நேரம் அசையாமல் அமர்ந்திருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

இதனால், இவரது கதாபாத்திரமும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

இன்னும் ஓரிரு தினங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவிருக்கிறது படக்குழு.

 

Related post