கையில் சுத்தியல்; முகத்தில் ஆக்ரோஷம் – வெளியானது “லியோ” பர்ஸ்ட் லுக்!

 கையில் சுத்தியல்; முகத்தில் ஆக்ரோஷம் – வெளியானது “லியோ” பர்ஸ்ட் லுக்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “லியோ”.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று இன்று வெளியாக இருக்கும் நிலையில், இரவு 12 மணியளவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இன்று(ஜூன் 22) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே நா ரெடி என்ற பாடல் வெளியாவதாக அறிவித்துள்ளனர். இதன் முன்னோட்டமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், விஜய்க்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

Related post