மலையாள திரையுலகில் நான்காவது படமாக 100 கோடி க்ளப்பில் இணைந்த “மஞ்சுமேல் பாய்ஸ்”

 மலையாள திரையுலகில் நான்காவது படமாக 100 கோடி க்ளப்பில் இணைந்த “மஞ்சுமேல் பாய்ஸ்”

அறிமுக இயக்குனர் சிதம்பரம் என்பவரின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மலையாள திரைப்படம் தான் மஞ்சுமேல் பாய்ஸ்.

இத்திரைப்படம் வெளியான நாள் முதல் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வசூலிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றோடு இத்திரைப்படம் இதுவரை சுமார் 100 கோடி வசூலை வாரிக் குவித்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை மலையாள உலகில் புலிமுருகன், லூசிஃபர், 2018 படங்கள் மட்டுமே 100 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் தற்போது நான்காவது படமாக 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

 

Related post