Tags : manjummel boys

News Tamil News

மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கேரளாவைத் தாண்டி தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. பல கோடிகளை வசூலாக குவித்து வருகிறது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்து இயக்குனர் சிதம்பரத்தை அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், படத்தினைப் பற்றி அதிகமாக இயக்குனரோடு கலந்துரையாடியிருக்கிறார் ரஜினிகாந்த்.  Read More

News Tamil News

மலையாள திரையுலகில் நான்காவது படமாக 100 கோடி

அறிமுக இயக்குனர் சிதம்பரம் என்பவரின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மலையாள திரைப்படம் தான் மஞ்சுமேல் பாய்ஸ். இத்திரைப்படம் வெளியான நாள் முதல் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றோடு இத்திரைப்படம் இதுவரை சுமார் 100 கோடி வசூலை வாரிக் குவித்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை மலையாள உலகில் புலிமுருகன், லூசிஃபர், 2018 படங்கள் மட்டுமே 100 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக […]Read More

News Tamil News

மலையாள இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த எஸ் டி

மலையாள பட இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் மலையாள மொழியில் வெளியான திரைப்படம் தான் மஞ்சும்மேல் பாய்ஸ். இத்திரைப்படம், கமல் நடிப்பில் உருவாகி வெளிவந்த குணா படத்தினை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படமானது கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் பிரபலங்கள் பலரும் இப்படத்தினை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிலம்பரசனும் இயக்குனர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.Read More