வெள்ளத்தில் மக்கள்; மீட்பு பணியில் உதயநிதி & மாரி செல்வராஜ்!
கடந்த மூன்று தினங்களாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. கிராமத்தில் உள்ள மக்கள் எங்கும் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்களை மீட்க போர்கால அடிப்படையில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில், களத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் தூத்துக்குடி மக்களை மீட்டெடுக்க அங்கு உள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் களமிறங்கி வேலை செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி கருங்குளத்தில் வெள்ளத்தில் மாரி செல்வராஜின் தந்தையும் சிக்கியிருக்கிறார்.