இன்று திருநெல்வேலி வருகிறார் விஜய்!
கடந்த சில தினங்களுக்குமுன் பெய்த பெருமழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பெரும் அளவிற்கு பாதிக்கப்பட்டது.
பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களுக்காக களத்தில் இறங்கி தமிழக அரசோடு பல தொண்டு நிறுவனங்கள் கிராமம் கிராமமாக சென்று பல உதவிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க இன்று நெல்லை வருகிறார்.
நெல்லை கே டி சி நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க இருக்கிறார்.